Tuesday, June 28, 2011

கண்டதும் காதலா என்னை கேட்டேன்...

மெல்லிய தூறலாய் ஒரு மாலை பொழுதிலே,
வேர்வைகள் வழிந்திட, சிறு சாலையின் நடுவிலே,
ஏக்கங்கள் தாக்கங்கள் ஏதும் இன்றி உன் முகம் பார்த்தேன்,
ஒரு நொடி பார்த்ததும் ஜென்மங்களாய், அறிந்தேன்னென எண்ணியே உனை நான்

கண்டதும் காதலா, என்னை கேட்டேன் நானடி,
உயிர்களின் வேர்களில், புது பூவாய் நீ அடி..

வாழ்வின் நோக்கத்தை மறந்தேன்,
உன் பதத்தின் வழிதனை தொடர்ந்தேன்,
புழுதி படிந்த தெருவில், நெரிசலில் உனை நான் தொலைத்தேன்,
உன் பிம்பம் மீண்டும் வடித்திட பகல் இரவாய் தவித்தேன்,
மறுமுறை காணும் பொழுதை எண்ணி ஏங்கும் மனம் சிரிக்கும்,
வார்த்தையை இழந்த குழந்தையை போல காணுகையில் மனம் தவிக்கும்,
கண் அயர்ந்தும் கண்களில் தூக்கத்தை பறித்துவிட்டாய்,
விண்மீன்களின் இடையே நடுவே ஓடியே ஒளிந்து மறைந்த உனை...

கண்டதும் காதலா என்னை கேட்டேன் நானடி,
உயிர்களின் வேர்களில் புது பூவாய் நீ அடி..

மெல்லிய தூறலாய் ஒரு மாலை பொழுதிலே,
பறவைகள் பறந்திட தேநீர் கடையின் நிழலிலே,
புகையிலை புகைகளின் நடுவினிலே மிக எழிமையாய்,
எந்தன் எண்ணங்கள் வண்ணங்கள் சொந்தங்களை, ஒரு பார்வையால் மாற்றிய உனை நான்

கண்டதும் காதலா என்னை கேட்டேன் நானாட,
மறுக்காத மனதினை புறக்கணிப்பது வீணட,

உன் பார்வையின் மழையில் நனைந்தேன்,
புதிதாய் மலர்ந்ததை உணர்ந்தேன்,
விழியோர பார்வைகள் பதித்து, நி இருக்கும் திசையை அறிந்தேன்,
மெலிதாய் மனதுக்குள் சிரித்து காற்றினில் கலந்தேன்,
கருத்தினில் நிறைத்து கவனத்தை துலைத்து படுக்கையில் நானும் புரண்டேன்,
தோழியை அழைத்து கதைகளை உரைத்து நினைவின்றி நானும் சிரித்தேன்,
பலர் இருந்தும் தனிமையில் ஏனோ நடக்க வைத்தாய்,
நான் தடுத்தும் வெறுத்தும் மறுத்தும், எளிதாய் மனதுக்குள் நுழைந்த உனை...

கண்டதும் காதலா என கேட்டேன் நானாட,
கண்டதும் காதல்தான் என உணர்ந்தேன் நானடி,
மணிநேரம், நிமிடம், நொடி அறிந்து மறுநாள் விரைந்தேன்,
உன் வருகையை அறிந்தே மறுதினமும் அச்சாலையை கடக்க நினைத்தே..

No comments: