Sunday, September 7, 2008

உனைக் கண்டேன்..

தென்றலில் வந்திடும் பா அலை
காலையில் மலர்ந்திடும் தாமரை
புவியில் மாறிடும் வானிலை
பெண்ணே உன் வருகையில்
இவை பிழை .

இதயச் சுவர்களில் மோதும் நினைவலைகள்
கரையினை வருடும் மெல் அலைகள்
உன் வருகையால் மனதில் மின் அலைகள்
உயிர் போகும் சிறை தானோ உன் விழிகள்....

கண்ணீர் மணிகளில் சரம் கோர்க்க
என் இரவினை எரித்தேன் உனை பார்க்க
கண்ணயர்ந்தால் கனவிலும் நான் ஏங்க
என் உயிரின் மிச்சமும் நீ வாங்க...

மனமின்றி இதயத்தில் துளையிட்டேன்
உன் நியாபகத்தை இறுதிச் சொட்டாய் அதில் வடித்தேன்
கண் விழித்து பார்த்து திடுக்கிட்டேன்
என் இதயம் மொத்தமும் உனைக் கண்டேன்..

Tuesday, August 12, 2008

உயிரின் எனது விளக்கம்

செங்கழனிச் சாலையிலே செந்தூரம் பாயையிலே
நாசியின் வழியில் வந்ததும் போனதுமாய்